Wednesday 27 January 2016

AvXTc0qp9fkYycDKavwvlPX3i6P43wZo0Aq fbZMVrAY

Monday 21 July 2014

வேண்டியதை தரும் சின்னமாடன் குடியிருப்பு வேம்படி சுடலை ஆண்டவர்

வேண்டியதை தரும் சின்னமாடன் குடியிருப்பு
வேம்படி சுடலை ஆண்டவர்



சாத்தான்குளத்திலிருந்து நானும் எனது நண்பரும் ஏதேனும் செய்தி  சேகரிக்க கிளம்பி பேய்குளம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தோம். தேனீர் அருந்தி சிறிது இளைப்பாரி விட்டு செல்லலாம் என்று முடிவு செய்தோம். வெயில்வேறு வாட்டி எடுத்தது. பேய்குளத்தில் இருந்து செல்லும் போது பழனியப்பபுரம் கடந்து சின்னமாடன் குடியிருப்பு செல்லும் மணல் சாலையில பயணித்த போது ஆள் நடமாட்டமே அங்கு காணவில்லை. 
அந்த இடத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் எங்கள் கண்களுக்கு பசுமையாக காணப்பட்டது. மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மிக உயர்ந்து வளர்ந்த ஆலமரம், சுற்றிலும் பசுமையாக தெரிந்த செடி கொடிகள் இவைகளை கண்டதும் எங்கள் மனதில் இங்கு ஏதேனும் தெய்வசக்தி இருக்கிறது என்று தோன்றியது. 
ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியாக இருப்பதால் இதுபற்றி யாரிடம் விசாரிப்பது என்று யோசனை செய்துக்கொண்டிருந்தபோது தூரத்தில் ஒரு பெரியவர் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தது எங்கள் கண்களுக்கு தென்பட்டது.  அவரிடம் நாங்கள் எப்படி பேச்சை தொடங்குவது என்று எண்ணிக்கொண்டு அவரிடம் தண்ணீர் தாகமாக இருக்கிறது இங்கு எங்கேனும் தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டோம். உடனே அவர் தன் கையில் வைத்திருந்த குடுவையை எங்களிடம் நீட்டினார். அதில் தண்ணீர் இருந்தது. நாங்கள் இருவரும் தாகம் தீர்த்துக்கொண்டோம். அவர் கொடுத்த அந்த நீர் மிகவும் சுவையாக இருந்தது. 
பின்பு அந்த பெரியவரிடம் இந்த இடத்தின் பசுமை பற்றி கேட்டோம். அதற்கு அவர் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்தபகுதிக்கு பிழைப்பு தேடி ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள். அவர்கள் இந்த மர நிழலில் ஓய்வெடுக்க தங்கினார்கள்.
அவர்கள் வரும் போது தங்கள் குலதெய்வமான ஸ்ரீவேம்படி சுடலை ஆண்டவரை  ஒரு குடுவையில் வைத்து கொண்டு வந்தார்கள். அந்த குடுவையுடன் ஒரு குத்து விளக்கும், சில மணிகளும், வைர, வைடூரியங்களும் தங்க நகைகளும் கொண்டு வந்தார்கள். (கல்லில் செய்த பெரிய குத்து விளக்கு அது) இவைகளையும் அந்த மரத்தடியில் வைத்து சிறிது நேரம் இளைப்பாறினார்கள். பின் அங்கிருந்து நகரும் வேளையில் குடுவையையும், கல்லால் ஆன குத்து விளக்கையும் எடுக்க முயற்சிக்கையில் அவை அங்கேயே நிலை பெற்றுவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த குடுவையும், கல்குத்துவிளக்கும், நவமணிகளும் அசையவில்லை-. மிகவும் மனம் வருந்தினார்கள்.
அப்போது அந்த மரத்தின் மேல் இருந்து ஒரு தெய்வக்குரல் கேட்டதாம் நீ இங்கிருந்து மூன்று கல் கிழக்கு நோக்கி செல் அங்கு உன் குடும்பத்தினர்களுடன் தங்கி இரு. நீ வசிக்கும் இடத்தில் எனக்கும் ஓர் கோயில் எழுப்பி என்னை வழிபடு. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் எனக்கு இங்கு வந்து பொங்கல் வைத்து நீ வசிக்கும் இடத்திற்கு அழைத்து செல். நீயும் உன் சந்நதியும் நலமோடு வாழ்வீர்கள் என்று கேட்டது என பெரியவர் உருக்கமுடமன் சொன்னதை கேட்டதும் நமக்கு உடல் சிலிர்த்து விட்டது. மிகுந்த மகிழ்ச்சியோடு நாமும் அந்த மரத்திற்கு அடியில் சென்று பார்க்கலாமே என்று தோன்றியது. பெரியவரை அழைத்தோம். பெரியவர் சிரித்துக் கொண்டே நான் எப்போதும் இங்கேயே தானே அப்பா இருக்கிறேன் நீங்கள் சென்று பாருங்கள் நான் சொன்ன உண்மை தெரியும் என்று கூறினார். அவர் சுட்டி சாட்டிய ஊர்தான் சின்னமாடன் குடியிருப்பு என்பதை உறுதி செய்து கொண்டோம்.
நாங்கள் அருகில் சென்று மரத்தடியில் பார்த்தபோது, ஏதோ ஓர் மகிழ்ச்சியும், வாசனையும் வந்தது. அந்த மரத்தின் மீது சந்தனம், குங்குமம் இருந்தது. சில காய்ந்து போன மாலைகள் தொங்கி கொண்டு இருந்தன. பெரியவர் சொன்ன கல்குத்து விளக்கு மட்டும் அங்கே இன்றும் காணப்படுகிறது. அதை கண்டு மகிழ்ந்தோம். ஆனால் அவர் குறிப்பிட்ட குடுவை மட்டும் அங்கு இல்லை. அதுதான் பெரியவர் கையில் இருக்கும் குடுவை என்ற உணர்வு அப்போதுதான் எங்களுக்கு தென் பட்டது. கை கூப்பி சுடலை ஆண்டவரை வங்கி விட்டு பெரியவருக்கு நன்றி சொல்வோம் என்று பெரியவர் நின்ற திசையை நோக்கி பார்த்தால் பெரிய வரும் இல்லை. ஆடு, மாடுகளும் இல்லை. பக்தியுடனே...  சின்னமாடன் குடியிருப்பு நோக்கி பயணம் செய்தோம். 
சின்னமாடன் குடியிருப்பு சிறிய கிராமம் தான் ஆனாலும் அங்கு வீற்றிருந்து அருள் வழங்கும் ஸ்ரீவேம்படி சுடலை ஆண்டவரின் அருளோ மிகப்பெரியது.
இவரை சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். முன்பெல்லாம் மாட்டு வண்டியை பூட்டிக்கொண்டு குடும்பம் குடும்பமாக ஸ்ரீசுடலை ஆண்டர் கொடை விழாவை காண வருவார்களாம்.
முன்பு ஒருமுறை இவ்வாலயத்தில் அருள்வந்து ஆடிய பேயாண்டி நாடார் சுடுகாட்டுக்கு வேட்டைக்கு சென்றார். வேட்டை ஆடி வரும் போது ஒரு மனித எழும்பு கூட்டை தன் தோள் மீது சுமந்து கொண்டு கோயிலுக்கு வந்து விட்டாராம் இதை கண்ட ஊர்மக்கள் அலறி அடித்து அதிர்ச்சி அடைந்தனர். இதில் சில தைரியமான பெரியவர்கள் அருள் வந்து ஆடும் பேயாண்டி நாடாரை பார்த்து இது என்ன கூத்து இப்படி நடந்து கொண்டால் எப்படி கொடை நடத்துவது? நீங்கள் வந்த கோலத்தை பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள் என்று கேட்டனர். உடனே பேயாண்டி நாடார் ஆலயத்தில் போடப்பட்டிருந்த பந்தலுக்கு வெளி யில் வந்து வானை நோக்கி, இந்தாபிடி என்று உரக்க குரல் கொடுத்துவிட்டு  தன்தோள்மீது கிடந்த மனித எழும்பு கூட்டை வானத்தைநோக்கி வீசியுள்ளார். அது அப்படியே மறைந்து போனதாம். பின்பு ஊர் பெரியவர்கள் ஒன்று திரண்டு சுடலை ஆண்டியிடம் வேட்டைக்கு செல்ல கூடாது. அப்படி வேட்டைக்கு செல்லகூடாது. அப்படி வேட்டைக்கு செல்ல வேண்டும் என்று தீர்மானித்தால் ஊருக்கு வெளியே நீர் போய் அமர்ந்து கொள்ளும், நாங்கள் அங்கு வந்து கொடை கொடுத்து கொள்கிறோம் என்று வேண்டவே சுடலை  ஆண்டவர் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்து கொடுத்தாராம். அன்று முதல் இன்று வரை இங்கு வீற்றிருந்து அருள் பாலிக்கும் சுடலை ஆண்டவர் வேட்டைக்கு செல்வதில் லையாம். இந்த சுடலை ஆண்டவருக்கு தங்கத்தினால் ஆன வேலும், வாளும், ஏராளமான தங்க, வெள்ளி நகைகளும் இருந்ததாம்.
இவரிடம் வேண்டிகொண்டால் வேண்டுதல் உடனே நிறைவேறிவிடும். சுடலை ஆண்டவர் ஆலயத்தில் பூக்குழி இறங்குவது சிறப்பாகும். இதை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அருள் வந்து ஆடுபவர்கள் பூக்குழியில் இறங்கி வந்து அருள்வாக்கு சொல்வார்கள் அப்போது சொல்லும் வாக்கு அப்படியே நடக்கிறது. 
பல ஊர்களில் சுடலைமாட சுவாமி கோயில் ஊருக்கு வெளியே கிழக்கு புறத்தில் தான் இருக்கும் ஆனால் சின்னமாடன் குடியிருப்பில் மட்டும் சுடலை ஆண்டவர் ஊருக்கு நடுவில்மிகவும் கம்பீரமாக வீற்றிருக்கிறார். வெளியூர்களில் வசிப் பவர்கள் கூட என்ன வேலை இருந் தாலும் சரி ஆடி கொடை விழாவிற்கு தவறாமல் வந்து சுடலை ஆண்டவரின் அருளை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

ஸ்ரீசேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா

ஸ்ரீசேர்மன் அருணாசல சுவாமி கோயில்
ஆடி அமாவாசை திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் வீற்றிருக்கும் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் இன்று ஆடி தை அமாவாசை திருவிழா மிகசிறப்பாக நடக்கிறது. சேர்மன் அருணாசல சுவாமி கோவிலுக்கு கிழக்கே திருச்செந்தூர் கடற்கரையில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும், தெற்கே குலசை முத்தாரம்மன் திருக்கோவிலும், குதிரைமொழி கிராமத்தில் கற்குவேல் அய்யனார் திருக்கோவிலும், மேலுப்புதுக்குடி அய்யனார்திருக்கோவிலும், நாலுமாவடி பாதகரை சுவாமி திருக்கோவிலும், வரண்டியவேல் கிராமம் கசங்காத்த பெருமாள் திருக்கோவிலும் வடக்கே சிறுத்தொண்ட நல்லூர் முத்துமாலைஅம்மன் திருக்கோவிலும் அதன் அருகே உமரிக்காடு முத்தாரம்மன் திருக்கோவிலும், மேற்கு கடலில் பாதி என்று அழைக்கப்படும் கடம்பாகுளம் அருகில் புன்னை நகர் புதல்வர் உருவாக்கிய தமிழகச் சுற்றுலா துறைத்தலங்களில் ஒன்றாக விளங்கும் வனத்திருப்பதி சுவாமி திருக்கோவிலும் சிறப்பாக அமையப்பெற்றது.
திருச்செந்தூர் அருகில் மேலப் புதுக்குடி கிராமத் தில் ராமசாமி நாடார், சிவ ணைந்த அம்மை யார் அவர்களுக்கு சேர்மன்  அருணா சல சுவாமி தவத் திரு குமாரனாக  அவதரித்தார். அருகில் உள்ள கிராமத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின் திருவைகுண்டம் தாலுகா ஏரல் மாநகரில் ஆரம்பக்கல்வி பயின்றார். அங்கு வாழ்ந்து வந்தார். கடவுள் அருள்பெற்ற தனது குடும்பத்தின் பரம்பரை வழக்கப்படி தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு சலக நோய்களையும் குணப்படுத்தினார்.
பொதுமக்களின் வேண்டு கோளுக்கிணங்க 1906 செப்டம்பர் மாதம் 5ந்தேதி முதல் 1908 ஜூலை மாதம் 27ந்தேதி வரை ஏரல் பஞ்சாயத்து போர்டு சேர்மனாகப் பணியாற்றினார்.
இப்பணியை சிறப்பாக செய்ததால் சேர்மன் என்ற பெயர் பெற்றார். சேர்மன் சுவாமி ஒருநாள் தன் சகோதரரை அருகில் அமர்த்தி பல ஆசிகள் கூறி நான் ஒரு வாரத்தில் (கலக வருடம் 1083&ம் (1908) ஆண்டு ஆடி மாதம் 13ந்தேதி (ஜூலை மாதம் 28ம் தேதி)  செவ்வாய்கிழமை ஆடி அமாவாசை அன்று பகல் 12 மணிக்கு இறைவன் திருவருடியில் சரணடைவேன் என்று கூறினார்.
ஏரலுக்கு தென்மேற்கில் இயற்கை எழில் கொஞ்சும் தாமரபரணி ஆற்றின் கரையோரம் ஆலமரத்தின்  அருகில் என்னை சமாது செய்ய வேண்டும்.
சமாதுகுழியில் என்னை வைத்து காத்திருங்கள். அந்த நேரத்தில் மேலே கருடன் மூன்று நேரம் வட்டமிடும். கருடனின் நிழல் என் மேல் விழும்போது சமாது குழியை மண்ணும் மலர்களுமாக சேர்ந்து மூடிவிடுங்கள் என்று கூறினார்.
சேர்மன் சுவாமிகள் சமாதி ஆகும் போது வயது 28 திருமணம் ஆகாமலேயே சமாதி ஆனார். அவர் சொன்ன வாக்கின்படியே நடந்தது. அன்று முதல் வற்றாத தாமிரபரணி ஆற்றின் வலது கரையில் திரு ஆலின் ஓரமாக புனித சமாது கொண்டு கருணை உருவமாக கற்பக கனியாக, ஜோதியாக கார்த்திடும் கற்பகத்தருவாக தன்னை  வேண்டும் அன்பர்க-ளுக்கு மண்ணும், தண்ணீரும் தன் திருமருந்தாக கொடுத்து சலக நோய்களையும் குணப்படுத்தி வருகிறார்.
அருணாசல சுவாமியை வழிபட வரும் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு ஈரஉடையோடு வலம் வந்து கொண்டு வரும் புனித நீரை லிங்கத்துக்கு அபிஷேகமாக ஊற்றுகின்ற வழக்கத்தை கொண்டிருந்தனர்.
இதனால் மண்ணால் செய்த லிங்கம் கரைந்து விடுமென்று கருதி கல்லில் லிங்கம் செய்து வைக்க வேண்டும் என் பக்தர்கள் நினைத்தார்கள். ஆனால் மண்ணால் செய்து வைத்த லிங்கம் புனித நீரை ஊற்ற ஊற்ற கரைவதற்கு பதிலாக வளர்ந்து கொண்டு வருவதை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
இதனால் இன்று மண்லிங்கமே மூலஸ்தானமாக விளங்குகிறது. இது இயற்கையாக அமைந்த சிற்பமாகும். கோவில் நிர்வாஸ்தர் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிநாடார் அவர்கள் தை அமாவாசை திருநாளான இன்று சுவாமியை வணங்கி உலகின் தலைசிறந்த மக்களாக வாழுங்கள் என்று அழைக் கிறார்.  பக்தர்களாகிய நாமும் ஆடி அமாவாசை திருநாளில் சேர்மன் அருணாசல சுவாமியை வணங்கி உலகின் தலை சிறந்த மக்களாக வாழ்வோம்.

Thursday 5 December 2013


மருந்தீஸ்வர்


கோவில் அமைப்பு: இவ்வாலயத்திற்கு கிழக்கில் 7 நிலை இராஜகோபுரம், அதையடுத்து 5 நிலை இரண்டாவது கோபுரம் மற்றும் மேற்கில் ஒரு 5 நிலை கோபுரம் அமைந்துள்ளன. மேற்கு கோபுரம் மகாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருப்பதால் இந்த வாயில் பிரதானமாக உள்ளது. கிழக்கிலுள்ள இராஜ கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு விசாலமான திறந்த வெளியும் வலது புறத்தில் தியாகராஜ மண்டபமும் இடது பறத்தில் கோவில் தீர்த்தமும் உள்ளது. நேரே சென்று 2-வது கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் கிழக்கு வெளிப் பிரகாரம் அடையலாம். அதில் வலது புறம் அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு வெளிப் பிரகாரத்தில் விநாயகை, முருகன் சந்நிதிகளுன் காணப்படுகின்றன. மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. இவற்றையடுத்து உள்ள சிறிய வாயில் வழியாக இறைவன் மருந்தீஸ்வரர் கருவறையை அடையலாம். மருந்தீஸ்வரர் கருவறைக்குள் செல்வதற்கு தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தியாகராஜர் மண்டபத்தின் வழியாக உள்ள தெற்கு வாயில் வழியாகவும் வர வசதி உள்ளது. கருவறையில் மூலவர் மருந்தீஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் மேற்கு நோக்கி காட்சி கொடுக்கிறார்.



பால்வண்ண நாதர், மருந்தீஸ்வர் ஆகிய பெயர்களால் இத்தலத்து ஈசன் அழைக்கப் பெறுவதற்குக் காரணங்கள் உள்ளன. ஒருசமயம் தேவலோகத்தைச் சேர்ந்த காமதேனு பிரம்மரிஷியான வசிஷ்டரிடம் சற்று அவமரியாதையாக நடந்து கொண்டது. அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர், "நீ பூவுலகில் பசுவாகப் பிறப்பாய்" என்று சாபமிட்டார். தன் தவறை உணர்ந்து வருந்திய காமதேனு வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டு, சாப விமோசனத்துக்கான வழியைக் கேட்க, "வான்மியூ ரில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லிங்கத்திற்கு தினமும் பால் சொரிந்து அபிஷேகம் செய்து வா. சாப விமோசனம் கிட்டும்" என்று கூறினார். அதன்படியே செய்து ஈசன் அருளால் சாப விமோசனம் பெற்றது காமதேனு. பசு பால் சொரிந்து சிவலிங்கம் வெண்ணிறமாகக் காட்சி தந்ததால் இவர் பால்வண்ண நாதர் என்று பெயர் பெற்றார். அதுபோலவே, இத்தலத்திற்கு வந்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு, உலகத்திலுள்ள அனைத்து வகையான நோய்கள் பற்றியும், அதைப் போக்கும் மருந்துகள் பற்றியும் ஈசன் உபதேசித்தருளினார். அதன் காரணமாகவே மருந்தீஸ்வரர், ஔஷதநாதர் (ஔஷதம்- மருந்து) என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார்.

மேற்கில் உள்ள சிறிய வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் கருவறை உட்பிரகாரம் மேற்குச் சுற்றில் கஜலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் செல்வ முத்துக்குமாரசாமி சந்நிதிகளும், வலதுபுறம் விநாயகர் சந்நிதி, நால்வர் சந்நிதி ஆகியவையும் உள்ளன. வடக்குச் சுற்றில் உற்சவ மூர்த்திகள் மண்டபம், அடுத்து நடராஜர் சந்நிதியும் அதையடுத்து 108 சிவலிங்கங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளதையும் காணலாம். வடக்குச் சுற்றின் முடிவில் தெற்கு நோக்கிய காலபைரவர் சந்நிதி உள்ளது. கிழக்குச் சுற்றில் வரிசையாக உள்ள கேதாரீஸ்வரர், இராமநாதேஸ்வரர், சுந்தரேஸ்வரர், அருணாசலேஸ்வரர் மற்றும் ஜம்புகேஸ்வரர் சந்நிதிகளைக் காணலாம். தெற்குச் சுற்றில் 63 நாயன்மார்களின் உருவச் சிலைகள் உள்ளன.

கருவறை சுவற்றின் வெளிப்புறம் வடக்கில் பிரம்மா, துர்க்கை, கிழக்கில் மஹாவிஷ்ணு, தெற்கில் தட்சிணாமூர்த்தி, கணபதி ஆகியோர் கோஷ்ட மூர்த்தங்களாக அழகுடன் காட்சி தருகின்றனர்.

தல வரலாறு: கயிலை மலையில் சிவன் பார்வதி திருமணம் நடைபெறும் சமயம் திருமணத்தைக் காண எல்லோரும் அங்கு கூடியதால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை அனுப்பினார். தென்புலம் சென்றால் தன்னால் தெய்வத் திருமணத்தைக் காண இயலாமல் போய்விடுமோ என்று சிவனிடம் முறையிட இறைவனும் அகத்தியர் விரும்பும் போது திருமணக் கோலம் காட்டி அருளுவதாக கூறினார். அதன்படி திருவான்மியூர் தலத்தில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளினார். அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியினால் அவதிப்பட்டார். இறைவன் அகத்தியருக்கு காட்சி கொடுத்து மருந்துகள் பற்றியும், அதன் உபயோக முறைகளைப் பற்றியும் உபதேசம் செய்து அருளினார். அதனாலேயே இறைவன் மருந்தீஸ்வரர் என்ற பெயருடன் இத்தலத்தில் அறியப்படுகிறார். சூரியனும், சந்திரனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால், இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை.

















ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் உள்ள வன்னி மரமே இத்தலத்தின் தல விருட்சமாகும். இந்த வன்னி மரத்தினடியில் தான் அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சி கொடுத்ததாக ஐதீகம். வான்மீகி ருனிவரும் முக்திப் பேறு வேண்டி நாரதரின் ஆலோசனைப் படி இத்தலம் வந்து இந்த வன்னி மரத்தடியில் தான் சுயம்பு லிங்கத்தைக் கண்டெடுத்து வழிபட்டதாக புராண செய்திகள் கூறுகின்றன. அகத்திய முனிவருக்காக ஒரு முறையும், வான்மீகி முனிவருக்காக ஒரு முறையும் ஆக இரண்டு முறை இறைவன் இந்த வன்னி மரத்தடியில் காட்சி கொடுத்துள்ளார். இந்த வன்னி மரத்தடியில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தில் ஒன்பதாம் நாள் இறைவன் அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

சிவஸ்தலம் பெயர் திருவான்மியூர்
இறைவன் பெயர் மருந்தீஸ்வரர், பால்வண்ண நாதர்
இறைவி பெயர் திரிபுரசுந்தரி, சொக்க நாயகி
பதிகம் திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 2
எப்படிப் போவது இந்த சிவஸ்தலம் சென்னையின் தென் பகுதியில் திருவான்மியூரில் இருக்கிறது. சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து திருவான்மியூருக்கு பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் லு கி.மி. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி  அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில்
திருவான்மியூர்
சென்னை
றிமிழி - 600041

Friday 17 May 2013

ஆத்தி சுவாமி வரலாறு


ஆத்தி சுவாமி வரலாறு




முன்பு ஒரு காலத்தில் இன்றைய ஆத்திகோவில், ஆதிகோவிலாக (பழைய) இருந்த பொழுது, மலையாள தேசத்திலிருந்து மந்திரவாதி ஒருவன் தினசரி ஆகாய மார்க்கமாக வந்து பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான், ஒரு நாள் பெரியசுவாமிகள் கோயிலுக்கு சென்றார், அங்கே பூட்டப்பட்டிருந்த கோயில் கதவுகளின் மேல் தனது கையை வைத்தார் உடனே திறந்து கொண்டது, உள்ளே சென்ற சுவாமிகள் பூஜைகள் செய்துவ்ட்டு திரும்பினார், பிறகு கதவு தானே தாள் இட்டுக்கொண்டது, வழக்கம் போல பூஜை செய்ய வந்த மந்திரவாதி, கதவை திறந்து உள்ளே சென்றான் சாமிக்கு பூஜை செய்துள்ளதை பார்த்து பூட்டிய கதவுகள் அப்படியே இருக்க யார் உள்ளே வந்திருக்க முடியும் என மந்திரவாதி குழம்பினான், கோயில் அருகில் தங்கி இருந்த பெரியசாமிகளிடம் சென்று பூஜை செய்தது யார் எனகேட்டான் அதற்க்கு சாமிகள் ''தான்'' தான் என்பதை ஒப்புக்கொண்டார், மந்திரவாதி இனிமேல் இந்தமாதிரி பூஜை செய்யக்கூடாது என மிரட்டிவிட்டு சென்றான்.
                மறுநாள் பூஜை செய்ய மந்திரவாதி வந்தான், முதல் நாள் போலவே பூஜை நடந்திருப்பதை பார்த்தவன், கோபம் அடைந்து சாமிகளிடம் சென்று நேற்றே நீ பூஜை செய்யக்கூடாது என கூறினேன்  பின்பும் ஏன் பூஜை செய்தாய் என கேட்டான் அதற்க்கு சாமிகள் கோவில் திறந்து இருந்தது நான் பூஜை செய்தேன் நீ கோவிலை நன்றாக பூட்டிசெல் என அமைதியாக கூறினார். சுவாமிகளின் பதிலை கேட்ட மந்திரவாதி கோவிலுக்கு சென்று கதவை நன்றாக சாத்தி வலுவாக பூட்டி சரிபார்த்து சென்றான். மறுநாள் வந்தான் கோயில் திறந்து பூஜை செய்திருந்தது கண்டான் கடும் கோபம் கொண்டு சாமிகளிடம் சென்று நீ இந்த இடத்தை விட்டு சென்று விடு இல்லாவிட்டால் நீ கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என கூறி வாக்குவாதம் செய்தான், அதற்க்கு சாமிகள் நான் பூஜை செய்த முறைகள் தவறா? அல்லது திறந்திருந்த கோவிலில் பூஜை செய்தது தவறா ? இதில் எதுவும் தவறில்லை எனவே எனக்கு எந்த தீங்கும் நேராது என்றார், இதைக்கேட்ட மந்திரவாதி கோபமுற்று சாமிகளை பழி வாங்க வேண்டுமென தீர்மாணம் செய்து தனது குருவிடம் நடந்ததை கூறி, சுவாமிகள் மீது ஏவல் பூஜை செய்து அவரை கொல்லுமாறு  பூதம் ஒன்றை ஏவினர், சாமிகள் தன்னை கொல்ல வந்த பூதத்தை பார்த்து ''சாந்தி'' என சொல்லவும், அந்த பூதம் சாமிகளின் காலடியில் அமைதியாக மண்டியிட்டு அமர்ந்தது விட்டது, சென்ற பூதம் திரும்பி வராததால் மந்திரவாதி மற்றுமொரு கொடுமையான பூதத்தை பழிவாங்க அனுப்பி வைத்தான் அந்த பூதமும் சாமிகள் ''சாந்தி'' என சொல்ல அமைதியாகிவிட்டது,
                    அனுப்பிய பூதங்கள்  செயலற்று போனதால் மந்திரவாதி மிக கோபம்  கொண்டு யாராலும் வெல்ல முடியாது என கருதப்படும் ''ருத்ரபூதத்தை '' அனுப்பி வைத்தான், ருத்ர பூதம் சாமிகளை கொல்ல விண்ணுக்கும் மண்ணுக்கும் தீப்பிழம்பாய் கொடுரமாக சென்று சாமிகளை நெருங்கியது சாமிகள் சாந்தி என்றார் ஆனாலும் பூதம் அடங்கவில்லை மேலும் தீவிரமாகியது அதைக்கண்ட சாமிகள் பதறினார் \



உடனே அன்னையை (மீனாட்சியம்மன்  அதாவது பெரிய பிராட்டி )நினைத்து வணங்கினார் உடனே அவ்விடம் வந்த அன்னை மிகவும் பலம் வாய்ந்த அந்த பூதத்தை பார்த்து ''ஆற்றி இரு'' (அதாவது ''ஆத்தி இரு '' அல்லது ஆறுதலாக இரு) என கட்டளை இட்டார் பூதம் சற்று அமைதியானது, பூதத்தை பார்த்து  அன்னை நீ வந்த காரணமென்ன ? என்று வினாவினார் அதற்க்கு ''ருத்ரபூதம்'' அருகில் இருந்த சுவாமிகளை காட்டி இவரை கொன்று வர எனக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது எனக்கூறி இவர் தங்களின் பக்தன் என எனக்கு தெரியாது, தெரிந்திருந்தால் நான் வந்திருக்கவேமாட்டேன் எனக்கூறி மன்னிப்பு கோரியது. அன்னை கருணையுடன் பூதத்தை மன்னித்து நீ இங்கேயே கோவிலில் ''ஆத்தி இரு'' உனக்கு இரு வகை படையல் உண்டு என அருளினார், ருத்ரபூதமும் அன்னையை வணங்கி அப்படியே ஏற்றுக்கொண்டு, தான் இப்பொழுது எழும்பியதால் எப்படியும் நரபலி கொள்ளவேண்டும் அதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் என கேட்க, அன்னை உன்னை அனுப்பியவனையே பலி கொள்ளுமாறு சொல்ல தன்னை அனுப்பிய மந்திரவாதியை நரபலி கொண்டு அமைதியாகியது, பின்னர் அன்னையிடம் கொடுத்த வாக்கின் படி இங்கு வந்து அமர்ந்தது,



 அன்னையின் வாக்குபடி ஆத்தி கோயிலில் மற்ற பணிவிடைகளோடு  ''மச்ச பணிவிடையும்'' ''கீரிச்சுட்டான்'' பணிவிடையும் சேர்த்து கொடுக்கப்பட்டு வருகிறது 



Sunday 10 March 2013

எஸ்.எம்.எஸ். மூலம் செல்போனை சார்ஜ் செய்யலாம்




எஸ்.எம்.எஸ். மூலம் 
செல்போனை சார்ஜ் செய்யலாம்

நாளுக்கு நாள் விஞ்ஞானிகளின் புதுப்புது கண்டுபிடிப்பு நம்மை அதிசயிக்க வைக்கும் வகையில் உள்ளது. தற்போது உலகம் முழுவதும் அனைவரும் விரும்பும் செல்போன் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. தகவல் தொடர்பு, பொழுது போக்கு என அனைத்து அம்சங்களும் உள்ளது. இதில் செல்போனை ரீசார்ஜ் செய்ய அந்தந்த நிறுவனங்களுக்கு போன் செய்யலாம், ஆன் லைனிலும் ரீசார்ஜ் செய்யலாம்.

ஆனால் செல்போன் பேட்டரி தீர்ந்துவிட்டால் அதை சார்ஜ் செய்ய எங்காவது மின்சார சுவீட்சைத்தான் தேடிப்போக வேண்டும். இனி இந்த சிரமம் வேண்டாம். ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும் தானாகவே பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்.

லண்டனைச் சேர்ந்த பப்பல்லோ கிரிட் நிறுவனம் இதை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எஸ்.எம்.எஸ். செய்த உடனே சூரியஒளி மின்சாரம் மூலம் செல்போன் பேட்டரி சார்ஜ் ஆகிவிடும். மின்சாரம் இல்லாத ஆப்பிரிக்க ஆசிய நாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி முதல் கட்டமாக ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக அங்கு சூரிய ஒளி மின்சார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும் உடனே சார்ஜ் ஆகும் வகையில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக செல் போன் வைத்திருப்பவர்கள் தங்கள் இருப்பிடங்களில் டெவிஸ் கருவி பொருத்தி இருக்க வேண்டும். அதன்மூலம் சூரியஒளி மின்சார நிலையத்துடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு இது செயல்படுத்தப்படுகிறது.

ஒரு போனில் பேட்டரி சார்ஜ் செய்ய 1 மணி நேரம் ஆகும். இதற்காக அதிக செலவு ஆகாது என்று பப்பல்லோ கிரிட் நிர்வாகி டேனியல் பெக்கேரா தெரிவித்தார்.

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர்




 பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்கள்
முதலமைச்சராக ஆற்றிய பணிகள்

ராசாசி கொண்டு வந்திருந்த ‘குலக்கல்வித் திட்டத்’தினைக் கைவிட்டதும், அவர் காலத்தில் நிதிநிலையைக் காரணம் கட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராசரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (மிமிஜி) தொடங்கப் பட்டது.

காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.


அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
பாரத மிகு மின் நிறுவனம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.